1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Governor Ravi tea party cm stalin participated

கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வாரா?

governor
இன்று மாலை தமிழக கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஒவ்வொரு குடியரசு தின விழாவிற்கு பின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவர்னர் விருந்தளிப்பார். அந்த வகையில் இன்று மாலை நடைபெற இருக்கும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
திமுக கூட்டணி கட்சிகள் இந்த விருந்தை புறக்கணிக்க போவதாக தெரிவித்திருந்த நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் இந்த விருந்தை புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் இருவரும் கை கொடுத்து சிரித்த முகத்துடன் இருந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
3900 பணியாளர்களை பணியை விட்டு நீக்கும் ஐபிஎம்? – அதிர்ச்சியே வாழ்க்கையான ஐடி ஊழியர்கள்!