1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (14:54 IST)

மாணவிக்கு காதல் தொல்லை; தட்டிக் கேட்ட தந்தையின் மீது இளைஞர்கள் தாக்குதல்

Vellore
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலூகாவில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததைத் தட்டிக்கேட்ட தந்தையை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலூகாவில்  உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சந்தோஷ் என்ற இளைஞர் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து, மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு, மாணவியின்  குடும்பத்தினர் சந்தோஷை தாக்கியுள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த சந்தோஷ், தன் ஆதரவாளர்களுடன் சென்று மாணவியின் வீடு புகுந்து மாணவியின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.

தற்போது, மாணவியின் குடும்பத்தினர் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடத்தியவர்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.