ஒரே நாளில் 63 பேரை துரத்தி துரத்தி கடித்த வெறி நாய்... எங்கே தெரியுமா?
சேலத்தில் வெறி நாய் ஒன்று 63 மக்களை துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வெறி நாய்க்கள் மக்களை தாக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் அதேபோல் சேலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் கிச்சிபாலையத்தில் நேற்று காலை ரோட்டில் நடந்து சென்ற 75 வயது முதியவரை கருப்பு நிற வெறி நாய் ஒன்று கொடூரமாக கடித்து குதறியுள்ளது. இதனைத் தொடர்ந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம அந்த நாய் கடித்துள்ளது. இதேபோல் கிட்டதட்ட 63 பேரை தாக்கியுள்ளது அந்த நாய். நாயை பிடிக்க சென்றவர்களும் அதன் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
எவ்வளவு முயற்சித்தும் அந்த நாயை பிடிக்க முடியாததால், இறுதியாக நாய் அடித்து கொல்லப்பட்டது. நாய் கடியில் பாதிக்கப்பட்டோர் அனைவரும் அரசு மருத்துவமனையில் நோய் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டனர். இச்சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.