1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 27 ஜூன் 2022 (08:14 IST)

ஓபிஎஸ் இல்லாமல் நடக்கும் அதிமுக ஆலோசனை கூட்டம்: பெரும் பரபரப்பு

ADMK
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தற்போது தேனி சென்றிருக்கும் நிலையில் திடீரென இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவின் ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்ளும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை பிரச்சனை அதிமுகவில் தீவிரமாக இருப்பது அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையிலிருந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனி சென்றார். 
 
இந்த நிலையில் திடீரென இன்று காலை அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தற்போது தேனியில் இருப்பதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது