வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2019 (16:03 IST)

ஆபாச வீடியோக்களை எடுத்து பெண்களை மிரட்டிய கும்பல்:கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளகுறிச்சியில் கரும்பு தோட்டம் ஒன்றில், பெண்களை மிரட்டி எடுக்கப்பட்ட, 100 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சிக்கியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சில வருடங்களாகவே, பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கள்ளகுறிச்சி கரும்புத் தோட்டத்திற்கு வரும் காதலர்களை வீடியோ எடுத்து, பின்பு சம்பந்தபட்ட பெண்களை அந்த வீடியோவை காட்டி மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ள ஒரு கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்த கும்பல் போலீஸாரிடம் சிக்குவதற்கு முன்பு, இறுதியாக கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 2 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை வலை வீசி வந்தனர்.

அந்த கும்பலைச் சேர்ந்த ஃபைனான்சியர் ராஜா மற்றும் வேலுமணி என்பவர், அந்த கல்லூரி மாணவியை ஆபாச வீடியோ எடுத்து பல நாட்களாக மிரட்டி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண், தனது பெற்றோரிடம் உண்மையை கூறியுள்ளார். இதனையடுத்து கள்ளகுறிச்சி போலீஸாரிடம் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் புகார் கூறினர்.

அந்த புகாரின் அடிப்படையில் வேலுமணி மற்றும் ஃபைனான்சியர் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவலகள் கிடைத்தன.

அதாவது அந்த கும்பல் 4 பேர்கள் கொண்ட கும்பல் என்றும், பல கல்லூரிப் பெண்களை மிரட்டி கிட்டத்தட்ட 100 ஆபாச விடியோக்களை எடுத்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கள்ளகுறிச்சி போலீஸார், இச்சம்பவத்தை குறித்த விசாரணையை தீவிரப்படுத்திவுள்ளது குறிப்பிடத்தக்கது.