1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (13:28 IST)

அண்ணாமலைக்கே சவாலா? அதிமுகவுடனான கூட்டணி முறிவை கொண்டாடிய பாஜகவினர்!

bjp
நேற்று அதிமுக- பாஜக கூட்டணியில் இல்லை என்று ஜெயக்குமார் அறிவித்த நிலையில், அதிமுக தலைமையை டெல்லி பாஜக தலைமை தொடர்பு கொண்டதாக தகவல் வெளியானது.

அதில், டெல்லி தலைமை மீது தங்களுக்கு அதிருப்தி இல்லை எனவும்,  பாஜக மா நில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பற்றி பாஜக தலைமையிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என்று அதிமுக  நிபந்தனை விதித்துள்ளதால், இதுபற்றி டெல்லி பாஜக தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், தமிழக பாஜகவினர் ‘’அண்ணாமலைக்கே சவாலா? அண்ணாமலையிடம் மோதாதே’’ என்று அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்,  சாலையில் கோஷம் எழுப்பியதுடன்,  அதிமுக- பாஜக கூட்டணியில் இல்லை என்று கூறியதை பாஜகவினர் மக்களுக்கு லட்டுகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.