வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (10:52 IST)

தேர்தல் ஆணையரின் அந்தஸ்து குறைகிறதா? வரும் கூட்டத்தொடரில் மசோதா?

தேர்தல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்கும் சட்ட மசோதா வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  
 
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில் அந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்தை குறைக்கும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் முன்னால் தலைமை தேர்தல் ஆணையர் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்தை அமைச்சரவை செயலாளர் அந்தஸ்துக்கு குறைக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்தை குறைத்தால் நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva