புதன், 27 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:04 IST)

''முன்கூட்டியே தேர்தல் வந்தால் எதிர்கொள்வோம்''- முதல்வர்

நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று    பீகார் மாநில முதல்வர்   நிதிஸ்குமார்  தெரிவித்துள்ளார்.

வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள   16 கட்சிகள் இக்கூட்டணியில்  இணைந்துள்ளன.

இந்த நிலையில், பாட்னா, பெங்களூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சமீபத்தில் மும்பையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில்,  மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியில் பொதுக்கூட்டம் ரத்து செயப்பட்டது.

இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வோம் என்று  பீகார் மாநில முதல்வர்   நிதிஸ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

''நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக எதிர்பார்க்கிறது. அதற்காக நாங்களும் காத்திருக்கிறோம். எவ்வளவு சீக்கிரம் தேர்தல் நடத்துகிறீர்களோ அத்தனை  நல்லது; நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ''என்று தெரிவித்துள்ளார்.