தயாநிதிமாறன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
தயாநிதிமாறன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
திமுக எம்பி தயாநிதி மாறன் சமீபத்தில் தலைமைச்செயலாளர் சண்முகம் அவர்களை சந்தித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது தாழ்த்தப்பட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து பாஜக, அதிமுக பிரமுகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் திருமாவளவன் உள்ளிட்டோர் அமைதி காத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து பாஜக நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர்.
அதேபோல் பாஜகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவையில் பி3 காவல் நிலையத்தில் தயாநிதிமாறன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளத். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது