வேலூரில் ஏ சி சண்முகம் வேட்புமனுத்தாக்கல் – முதல்வர், பிரதமர் பிரச்சாரம் !
வேலூரில் அதிமுக வேட்பாளராக களமிறங்கி இருக்கும் ஏ சி சண்முகம் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் மகன் கதிர் ஆனந்த் வீடுகளில் வருமானவரி துறை ரெய்டு நடத்தியது. இதில் கதிர் ஆனந்த் உறவினர்கள் வீட்டில் 10 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் என கூறப்பட்டதால் வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
நேற்று வேலூர் சட்டமன்றத்திற்கான தேர்தல் ஆக்ஸ்டு 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்ததையடுத்து மீண்டும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும் அதிமுக சார்பில் ஏ சி சண்முகமும் மீண்டும் போட்டியிட உள்ளனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக தீபலட்சுமி என்பவரை சீமான் அறிவித்துள்ளார். இந்நிலையில் முதல் வேட்பாளராக அதிமுகவின் ஏ சி சண்முகம் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘எனக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடியும் வேலூரில் பிரச்சாரம் செய்வார்கள்’ எனத் தெரிவித்தார்.