செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (16:56 IST)

ஸ்டைலாக முடி வெட்டியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

Death
சிவகங்கை மாவட்டம் அருகே ஸ்டைலாக முடி  வெட்டியதை தந்தை கண்டித்ததால் சிறுவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இன்றைய மாணவர்கள், மற்றும் இளைஞர் எதேனும் ஒரு சிறிய காரணத்திற்காக தங்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவர் அங்குள்ள சலூன் கடையில்  பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடிவெட்டியுள்ளார்.

முடிவெட்டி பின் வீட்டிற்கு வந்த அவரை தந்தை திட்டியுள்ளார். மகனை திட்டியதுடன் உடனே கடைக்கு அனுப்பி ஒட்ட முடி வெட்ட வைத்துள்ளார் தந்தை.

இதனால் சிறுவன் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.