வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (13:30 IST)

பள்ளி மாணவியை வழிமறித்து தாக்குதல்.! வாலிபர் சிறையில் அடைப்பு.!

arrest
திருத்தணி அருகே அரசு பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி, கனகம்மாசத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில்  11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இந்த நிலையில் பள்ளி முடிந்து மாணவி வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்ற வாலிபர், சைக்கிளில் வந்த மாணவியை கீழே தள்ளி படுகாயம் ஏற்படுத்தி உள்ளார்.

 
இதுகுறித்து அந்த மாணவி தந்தையிடம் தெரிவித்த நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார், மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.