எட்டுக்குடி முருகன் கோயிலில் உள்ள 8 கோபுரக் கலசத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலைத்துறை வல்லுநர் குழுவினர்!
நாகை மாவட்டம் எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி13 ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது எட்டு கோபுர செப்பு கலசத்தில், பூசப்பட்ட தங்க முலாம் நிறம் மங்கி காணப்பட்டது.
இந்நிலையில் தங்க முலாம் பூசப்பட்டத்தில் ஐயப்பாடு இருப்பதாக எழுந்த புகாருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாகை இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர்/சரிபார்ப்பு இராணி,இந்து சமய அறநிலைத்துறை மண்டல வைர நுண் அறிஞர் இரா.ஹரிஹரன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் இன்று கலசத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயிலில் உள்ள மூலவர், சௌந்தரேஸ்வரர், ஆனந்தவல்லி அம்மன் மற்றும் ராஜகோபுரம் ஆகியவை முறைப்படி யாகசாலை பூஜையோடு மூலவர் ராஜகோபுரம் உள்ளிட்ட எட்டு கோபுர கலசங்கள் கீழிறக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின் போது துப்பாக்கி இந்திய போலீசாரோடு 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோயில் செயல் அலுவலர் பி.எஸ்.கவியரசு, ஒன்றிய கவுன்சிலர் டி.செல்வம், காவல் உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செந்தில்,ஊர் முக்கியஸ்தர்கள் வை.சண்முகநாதன்,ஸ்ரீதர், ஜெயச்சந்திரன், ராஜா, பழனிவேல், கருப்பையன், மாசேந்துங் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள், கோயில் பணியாளர்கள், காவலர்கள் பலர் உடனிருந்தனர்.