வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 30 மே 2024 (16:03 IST)

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் ஆய்வு!

முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல் மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழ்நாடு நீர்வளத்துறை அறிவித்துள்ளது.
 
கடந்த 18-ம் தேதி நடக்கவிருந்த ஆய்வு தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய நீர்வள தலைமை பொறியாளர் தலைமையிலான கண்காணிப்புக் குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது.
 
புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் அடுத்த மாதம் ஆய்வு குழு அணையை ஆய்வு செய்ய உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.