எங்களால் எப்படி இவ்வளவு சுமையை தாங்க முடியும்? பிரதமருக்கு கேள்வி எழுப்பிய 6 வயது சிறுமி!
எங்களால் எப்படி இவ்வளவு சுமையை தாங்க முடியும்? பிரதமருக்கு கேள்வி எழுப்பிய 6 வயது சிறுமி!
எங்களால் எப்படி இந்த வயதில் இவ்வளவு சுமையை தாங்க முடியும் என 6 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் காலையில் 4 மணி நேரம் தொடர்ச்சியாக நடை பெறுவதை அடுத்து இதுகுறித்து ஆறு வயது சிறுமி ஒருவர் தனது மழலை மொழியில் வீடியோ ஒன்றின் மூலம் புகார் அளித்துள்ளார்
ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்குத்தான் முடிவடைகின்றது என்றும், ஆங்கிலம் கணக்கு உருது கம்ப்யூட்டர் ஆகிய வகுப்புகள் அடுத்தடுத்து நடக்கின்றன என்றும் சின்ன குழந்தைகளுக்கு எங்களுக்கு அதிக வேலை உள்ளது என்றும் இந்த வயதில் எங்களால் எப்படி இவ்வளவு சுமையை சுமக்க முடியும் என்றும் மழலை மொழியில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்
6 வயது சிறுமிக்கு தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் பாடங்கள் நடத்தினால் எப்படி அந்த குழந்தை தாக்குப் பிடிக்கும் என்று கல்வியாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சின்ன குழந்தையின் கேள்விக்கு பிரதமர் மோடி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.