வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 20 மே 2024 (12:58 IST)

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

Modi
சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேசமயம், யாரையும் சிறப்புக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி வகுப்புரீதியாக பிளவுபடுத்தும் பேச்சுகளை பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில், அரசியலமைப்பின் மதச்சார்பற்ற உணர்வை காங்கிரஸ் தொடர்ந்து மீறுவதாக தெரிவித்துள்ளார். 
 
வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சியை அம்பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டதே தனது தேர்தல் பிரசாரம் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
 
மேலும் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை என குறிப்பிட்ட பிரதமர், காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராகத்தான் பேசுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு கிடையாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோர் முடிவு செய்ததாக அவர் கூறியுள்ளார். 

 
பாஜக ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்ததில்லை என்றும் இன்று மட்டுமல்ல என்றுமே இருந்ததில்லை என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.