நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!
பாடகி சுசித்ரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் கொக்கேன் பயன்படுத்தினரா என்று உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி வலியுறுத்தியுள்ளார்.
பிரபல பின்னனி பாடகி சுசித்ரா கடந்த 2017 ஆம் ஆண்டு "சுச்சி லீக்ஸ்" என்ற பெயரில் பல்வேறு திரை நட்சத்திரங்களின் அந்தரங்கை வாழ்க்கை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனையடுத்து சில ஆண்டுகள் வெளியுலகிற்கு தெரியாத வகையில் அமைதி காத்து வந்த சுசித்ரா தற்போது யூடியூப் சேனல்களுக்கு கொடுத்த பேட்டி தான் பரபரப்பாகியுள்ளது.
வெளியில் தன்னை நல்லவரை போல காட்டிக் கொள்ளும் விஜயின் வீட்டில் இதுபோல பல பார்ட்டிகளில் நடந்திருக்கிறது என்றும் திரிஷாவும் இந்த கேங்கில் ஒருவர்தான், தனது பணக்கார நண்பர்களுடன் பெட் கட்டி, விஜய் வீட்டின் முன் குடித்துவிட்டு அவர் நடனமாடியதும் உண்டு என்றும் சுசித்ரா தெரிவித்திருந்தார். திரையுலகில் அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் நடிகர் தனுஷ், வெங்கட் பிரபு, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் மீது அவர் புகார் கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறையில் கொடுத்துள்ள புகார் மனுவில், கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டில் இளைய சமூகம் சீரழிகின்ற வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மட்டும் இன்றி இளம் சிறார்கள் மத்தியிலும் தடைச் செய்யப்பட்ட மிக கொடிய போதை பொருள் விஸ்த்துக்கள் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல நடிகர் நடிகைகளான நடிகர் தனுஷ், விஜய், விஜய்யேசுதாஸ். திரிஷா, ஆண்ட்ரியா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னால் கணவர் கார்த்திக் ஆகிய இவர்கள் விருந்து நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கொக்கேன் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா பல்வேறு Youtube சேனலில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் இடையே இந்த கொக்கேன் என்ற போதை பொருள் பயன்படுத்தினால் இளைய சமூகத்தின் இடையே மாணவர்கள் இடையே அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்காது என்று எண்ணம் உருவாகியுள்ளது அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
பாடகி சுசித்ரா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளையும் கொக்கேன் பயன்படுத்தினரா என்று உடல் பரிசோதனை செய்து இந்த கொக்கேன் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது இவர்களுக்கு கொக்கேன் கொடுத்த அந்த போதை பொருள் கும்மல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வீரலட்சுமி தனது புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.