Daily Horoscope
✕

நாளை எங்கெங்கு விடுமுறை: வெளியாகி வரும் அறிவிப்புகள்!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (16:14 IST)
மாண்டஸ் புயல் காரணமாக நாளை கல்வி நிலையங்களுக்கான விடுமுறை குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.


மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை மணிக்கு 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை கல்வி நிலையங்களுக்கான விடுமுறை குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியல் நீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

இந்தியாவில் அதிவேக இண்டர்நெட் சேவை!.. எலன் மஸ்க் அறிவிப்பு....

தேவாவின் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!.. அரசு மரியாதையோடு அடக்கம்!...

பயமா இருக்கா?.. போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்!.. விஜயை கலாத்த ஸ்டாலின்..

இந்தியா மீதான 100 சதவீத வரி நிறுத்தி வைப்பு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இப்ப வரி போடுவாரா டிரம்ப்?!.. ரஷ்யாவிடமே டீசல் வாங்கும் அமெரிக்கா!..

அடுத்த கட்டுரையில்
Show comments