Daily Horoscope

கெட்டுப்போன 500 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்: எங்கே தெரியுமா?

Updated: வியாழன், 22 நவம்பர் 2018 (09:28 IST)
மதுரை திருமங்கலத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கெட்டுப்போன 500 கிலோ ஆட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சமீபத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது. அது நாய்க்கறியாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து விசாரிக்க அதிகாரிகள் ஜோத்பூர் விரைந்துள்ளனர். இதனால் இறைச்சி விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. 
 
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி விற்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கிருந்த பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 500 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பினாயில் ஊற்றி அதிகாரிகள் மண்ணில் புதைத்தனர். இச்சம்பவம் திருமங்களம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு ? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு..!

விஜய் Sorry கேட்டதை ஸ்டாலின் வெளியே சொன்னது சரியா?!.. இணையத்தில் விவாதம்....

கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார் தாயார் பெயர் நீக்கமா? வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் பரபரப்பு..

தமிழகத்தின் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்தும் தூத்துக்குடி.. அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்..

அடுத்த கட்டுரையில்
Show comments