புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (20:31 IST)

எமதர்ம ராஜாவாக ஹீரோவாகும் யோகிபாபு

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் நாகேஷ் முதல் சந்தானம் வரை ஒருசில படங்களிலாவது ஹீரோவாக நடித்து தங்கள் ஆசையை நிறைவேற்றி கொள்வதுண்டு. அந்த  வகையில் இன்றைய முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபுவும் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் 'தர்மபிரபு' என்று உறுதி செய்யப்பட்டு சற்றுமுன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் யோகிபாபு எமதர்மராஜா வேடத்தில் ஒரு சிம்மாசனத்தில் கையில் பாசக்கயிறுடன் உட்கார்ந்துள்ளார்.

முழுநீள காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை முத்துகுமரன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் 'விமல், வரலட்சுமி நடித்த 'கன்னிராசி' என்ற படத்தை இயக்கியவர் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.