1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (11:36 IST)

மதுரை எய்ம்ஸ்-இல் தொடங்கியது மாணவர் சேர்க்கை!

கடந்த சட்டசபை தேர்தலின் போது ஒரே ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு இதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது
 
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ள மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாடு அரசு அளித்த ஒப்புதலின் அடிப்படையில் மதுரையில் 50 மாணவர்கள் சேர்க்கை நடந்து உள்ளது என்றும் மதுரை எய்ம்ஸில் இடம் கிடைக்கும் 50 மாணவர்களும் ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக் படிப்பார்கள் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை விரைந்து துவங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் வீரமணிதெரிவித்தார்