செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 பிப்ரவரி 2022 (11:55 IST)

தமிழக முதல்வரின் உருவ பொம்மையை டெல்லியில் எரித்த மாணவர்கள்!

தமிழக முதல்வரின் உருவ பொம்மையை டெல்லியில் எரித்த மாணவர்கள்!
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் தமிழக முதல்வர் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி தமிழக முதல்வரின் உருவ பொம்மையை டெல்லியில் உள்ள ஏ.பி.வி.பி மாணவர்கள் எரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் இதுவரை தமிழக அரசு மாணவியின் குடும்பத்திற்கு ஆதரவாக எந்த ஒரு செயலையும் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது 
 
குறைந்தபட்சம் லாவண்யாவின் வீட்டிற்கு முதல்வர் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் லாவண்யா தற்கொலையை மூடி மறைக்க தமிழக முதல்வர் முயற்சி செய்வதாகவும் இதனை கண்டித்து டெல்லியில் உள்ள ஏபிவிபி மாணவர் அமைப்பினர் தமிழ்நாடு இல்லம் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்ததகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் லாவண்யாவுக்கு நீதி வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்