1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2022 (23:49 IST)

மீன் மார்க்கெட்டில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் ! அதிகாரிகள் சோதனை

Fish
வேலூர் மாவட்டத்தில் இன்று காலை வேலூர் கோட்டை அருகேயுள்ள மீன்மார்க்கெட்டில் இன்று  உணவுப் பாதுகாப்பு  நியமன  அலுவலர்  செந்தில்குமார், உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கடைகளில் கெட்டுப்போன மீங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர். அந்த மீன் களின் செதில்ககள் கருப்பு நிறத்தில் மாறிக் கெட்டுப் போயிருந்தது. அத்துடன் தடை செய்யப்பட்ட அணை மீன் களும் அங்கு வைத்திருந்தனர்.    மேலும் சாலையோரக் கடைகளிலும், மார்க்கெட்டிலும் ஆக மொத்தம் 50 கிலோ கெட்டுப்போன மீன்களைப் பறிமுதல் செய்தனர். இதுபோல் கெட்டுப்போன மீன் கள் இருந்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.