1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 24 ஜனவரி 2024 (21:21 IST)

தருமபுரியில் நடந்த கோர விபத்தில் 4 பேர் பலி

Dharmapuri
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 லாரிகள் அடுத்தடுத்து  மோதி விபத்து ஏற்பட்டது.இதில் 4 பேர் பலியாகினர்.

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தின் மீது இரு லாரிகள் மற்றும் 3 லாரிகள் அடுத்தடுத்து  மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்து,3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவ்விபத்தில் காயமடைந்து,  மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டிருந்த அரியலூரைச் சேர்ந்த ஜெனிபர்  பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது..

இந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் 950க்கும் மேற்பட்ட விபத்த்கள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும், தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் தொடர்கதையாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.