புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (07:46 IST)

சென்னை, கோவை உள்பட 37 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: 3வது அலை ஆரம்பமா?

இந்தியா முழுவதும் 37 மாவட்டங்கள் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து மூன்றாவது அலை வந்து விட்டதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது தற்பொழுதுதான் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபரில் உச்சம் அடையும் என்று மருத்துவ வல்லுநர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர் 
 
அதன்படி தற்போது மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதைகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை சென்னை கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் படிப்படியாக மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே அதிகரித்துவரும் 37 மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்துவரும் 37 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது