செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (15:19 IST)

குளித்தலையில் ஆற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  கதவணையைச் சுற்றிப் பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கிப் பலியாகினர்.

கரூர் மாவட்டம்  குளித்தலை அருகே உள்ள மாயனூர் கதவணையைச் சுற்றிப் பார்க்க வந்த 3 பள்ளி மாணவிகள் வந்தனர்.

காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய மாணவிகள் 4 பேரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள அரசுப் பள்ளியில் அடித்து வந்த  3 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.