வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth

இனி மாணவர்கள் பேருந்துகளில் புட்போர்டு அடிக்க முடியாது- ஓட்டுனர் & நடத்துனர்களுக்கு புதிய உத்தரவு!

அரசு பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொள்வது குறித்து பல்வேறு புகார்கள் அடிக்கடி எழுந்து வருகின்றன.

இந்நிலையில் மாணவர்களின் இந்த போக்கைத் தடுக்கும் விதமாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் “அரசு பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்கிறது. மாணவர்கள் இவ்வாறு உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டால் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தி, முறையற்ற பயணத்தைத் தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.

ஓட்டுநர்கள், நடத்துநர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்காமல் செயல்பட்டால், காவல் நிலையம் அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத்திற்குத் தகவல் தெரிவித்து அவர்கள் புகார் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு” எனக் கூறப்பட்டுள்ளது.