வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (11:30 IST)

21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாரிகள் தகவல்

2021 ஆம் ஆண்டில் இதுவரை 21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கை காரணமாக கொண்டு 18 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு சட்டத்திற்கு புறம்பாக குழந்தை திருமணம் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 
இதுகுறித்து தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னதாகவே, குழந்தை திருமணங்கள் நடத்துவது சட்டப்படி பெரும் குற்றம். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், அதை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 
 
இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 64 குழந்தை திருமணங்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் நடப்பு, 2021 ஆம் ஆண்டில் இதுவரை 21 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.