வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (09:21 IST)

அட்சய திருதியையில் குழந்தை திருமணம் அமோகம்?? – சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

இன்று அட்சயதிருதியை என்பதால் குழந்தை திருமணம் நடத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறைவான வயதில் திருமணம் செய்வது சட்டபடி குற்றம் என்பதுடன் தண்டனைகளும் உள்ளன. ஆனாலும் மறைமுகமாக குழந்தை திருமணங்கள் நடப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று அட்சயதிருதியை நடைபெறும் நிலையில் குழந்தை திருமணம் அதிகம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள சென்னை ஆட்சியர், இதுபோன்ற குழந்தை திருமணங்கள் நடத்துபவர்கள் மீது 2 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும், குழந்தை திருமணம் தொடர்பான புகார்களை 109 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.