புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (12:32 IST)

தேர்தலுக்கான முன் ஏற்பாடுகள் என்ன? பிரகாஷ் பேட்டி!

சென்னை ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரகாஷ் , மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்  தலைமையில் நடைபெற்றது. 

 
அதிமுக , திமுக உள்ளிட்ட   அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர் ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ், " 2 முக்கிய காரணங்களுக்காக இன்று  கூட்டம் நடைபெற்றது. அங்கீகரிக்ப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் , காவல் ஆணையர் , மாநகராட்சி இணை ஆணையர்கள் இதில் பங்கேற்றனர். 
 
பதற்றமான வாக்குசாவடிகளின் எண்ணிக்கை குறித்து காவல் ஆணையரிடம் கலந்துரையாடல் நடந்தது.தேர்தல் ஆணையம் , உச்ச நீதிமன்ற ஆணைப்படி பதற்றமான சாவடிகளை கையாளுவது குறித்து ஆலோசனை நடந்தது. சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் , நுண் பார்வையாளர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
 
ஒரு தொகுதியில் 16 பேருக்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கூடுதல் வாக்கு பதிவு எந்திரம்  தேவைப்படும். சென்னைக்கு கூடுதல் வாக்குபதிவு எந்திரங்கள் தேவைப்படுகின்றன. தற்போது 7098 வாக்குப் பதிவு எந்திரங்கள் 7454 விவிபாட் எந்திரங்கள் இருக்கின்றன. 537 விவிபாட் இயந்திரங்களின் செயல்திறன் சோதிக்கப்பட்டுள்ளன. 
 
சென்னையில் மொத்தமுள்ள 7,300 தபால் வாக்கில்  1182 வயது முதிர்ந்தோர்  வாக்குகள் நேற்றுவரை பதிவு மேலும் மாற்றுத்திறனாளிகள் வாக்கும் பெறப்பட்டுள்ளன. வாகன சோதனைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். போக்குவரத்துக்கும் , இயல்பு வாழ்க்கைக்கும் முடிந்தளவு பாதிப்பின்றி வாகன சோதனைகளை நடத்த முடிவு.
 
அடுத்த ஒரு வாரம் தீவிரமாக பிரசாரம் நடக்கும். எனவே புகார் பெறும் எண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க  முடிவு செய்துள்ளோம். அதன்படி  1950  மற்றும் 18004257012 எண்ணில் தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். சி விஜில் செயலியை தரவிறக்கம் செய்து புகைப்படமாக புகார் அளிக்கலாம்.