மாணவர் சேர்க்கை இல்லை: 20 பொறியியல் கல்லூரிகள் மூடல்!
நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால் 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனாவல் வருமானம் குறைவு, கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாத நிலை ஆகியவை காரணமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளது குறிப்பாக தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு திணறிக் கொண்டிருக்கிறது
இந்த நிலையில் கடந்த ஆண்டு 460 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளதால் 440 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்து வருவதாக கூறப்படுகிறது
இந்த 20 பொறியியல் கல்லூரிகளும் நடப்பாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.