திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஒரே பள்ளியின் 6 மாணவர்களுக்கு கொரோனா: பல்லடம் பகுதியில் பரபரப்பு!

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த வகுப்புகள் தொடங்கியதிலிருந்து ஒரு சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பல்லடம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அந்த மாணவர்கள் 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 
6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று  உறுதியானதை அடுத்து வரும் ஞாயிறு வரை அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பள்ளி முழுவதும் சேர்த்து தூய்மைப்படுத்தவும் உத்தரவிட்டு இருப்பதாகவும் அந்த பள்ளியில் படித்து வரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் உடனடியாக பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.