வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (16:03 IST)

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.! நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தல்.!

TMK Alosonai
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று சென்னை பனையூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
 
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 
 
Actor Vijay
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்  சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது.
 
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. புதிய வாக்காளர்களை கட்சியில் சேர்க்க செலுத்த வேண்டும் என்றும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
 
மேலும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கும் போது கட்சி தலைமையின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 
கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கட்சியின் நியமனங்கள் மற்றும் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.