தென்மாவட்டங்களில் கனமழை - அரசு அறிவுறுத்தல்
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எ.ஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளதாவது:
அரபிக்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதை அடுத்து, தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அதன்படி, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
குமரிக்கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தாமிரபரணி ஆற்றில் 7000 கன அடி உபரி நீர் திறப்பு-பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.