வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2024 (15:39 IST)

தமிழக அரசியலில் காமெடியன் அண்ணாமலை..! தேர்தலில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம்.! ஜவாஹிருல்லா..

Jawaraulla
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட  ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்று திமுகவிடம் கேட்டுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
 
விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப் பெருந்தகைக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலில் ஒரு காமெடியனாக மாறிவிட்டார் என்றும் அதனால்தான் அவருடைய ஒவ்வொரு அறிக்கைகளும் அதன் அடிப்படையில் தெரிகிறது என்றும் விமர்சித்தார்.
 
மீனவர்கள் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறார்கள் என தெரிவித்த அவர்,  கன்னியாகுமரியில் மீனவர்களோடு சென்ற ஒரு மீனவர் காணாமல் போய் ஒன்றரை மாதம் ஆகிவிட்டது என்றும் அவரது குடும்பத்திற்கு எந்தவிதமான இழப்பீடும் ஒன்றிய அரசு இதுவரை தரவில்லை என்றும் ஜவாஹிருல்லா குற்றம் சாட்டினர்.
 
2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டது. அதன் பிறகு 2019ல் போட்டியிட வாய்ப்பு இல்லாவிட்டாலும் திமுக கூட்டணியை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் மிக சிறப்பான பரப்புரை செய்தோம் என்று அவர் கூறினார்.
 
2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.


வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களுக்கு ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்று கட்சியினர் விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றும் எந்த தொகுதி வந்தாலும் அந்த தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றும் ஜவாஹிருல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.