புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2024 (16:38 IST)

சென்னையில் 156 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்... களப்பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்!

தீபாவளி வந்துவிட்டாலே புத்தாடை, இனிப்பு, புதிய திரைப்படங்கள் வரிசையில் முக்கிய இடம் பெறுவது பட்டாசு வகைகள்தான். தமிழகத்தை பொறுத்தவரை சிவகாசியில் அதிக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. அங்கு விலையும் மிகவும் குறைவு. சென்னையில் ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் பட்டாசி சிவகாசியில் 200 ரூபாய்கு வாங்கிவிட முடியும்.

ஆனாலும், எல்லாராலும் பட்டாசு வாங்க சிவகாசிக்கு செல்ல முடியாது என்பதால் தங்களின் சொந்த ஊரியேலே பட்டாசுகளை வாங்குகிறார்கள். முன்பெல்லாம் மக்கள் அதிகமாக கூடும் பஜார்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாக மக்களின் பாதுக்காப்பு கருதி சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு மைதானத்தில் பட்டாசுகடைகள் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பெரும்பாலானோர் அங்கு சென்று பட்டாசு வாங்குவதில்லை. எனவே, சின்ன சின்ன நகரங்களில் பஜார்களில் பட்டாசு கடைகள் வைக்க துவங்கிவிட்டார்கள். பொதுவாக தீபாவளி சமயத்தில் தமிழகத்தில் கண்டிப்பாக மழை பெய்யும். மழை பெய்தால் பட்டாசு வெடிப்பது குறைந்துவிடும்.

அதோடு, பட்டாசு விற்பனையும் பாதிக்கும். இந்த தீபாவளிக்கும் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் மழை பெய்தது. ஆனாலும், சென்னையில் பல பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினார்கள். அப்படி வெடிக்கப்படும் பட்டாசுகளின் கழிவுகள் சாலையிலேயே கிடக்கும்.

இதை அப்புறப்படுத்த துப்புறவு பணியாளர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். ஆனாலும் எல்லா வருடமும் இது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில், சென்னையில், அக்டோபர் 31ம் தேதி மதியம் முதல் இன்று மதியம் 12 மணி வரை 156.48 டன் பட்டாசு கழிவுகளை மாநகராட்சி துப்புறவு பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.  மேலும், பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.