புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (15:42 IST)

நீட் நுழைவுத்தேர்வு- தமிழகத்தில் 15 பேர் முறைகேடு !- மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆண்டு தோறும் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. பல மாநிலங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான இடங்களை ஒதுக்கி, பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுப்பப்படுவர்.

இந்நிலையில். நடப்பு ஆண்டில் நடந்த நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.