வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (15:55 IST)

தமிழகத்தில் தேர்தல் செலவு ரூ.744 கோடி ....

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் சட்டப்பேவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், அப்போதைய ஆளுங்கட்சியாக அதிமுக, தலைமையில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிட்டன. எதிர்க்கட்சியான திமுக தலைமையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தனித்துப் போட்டியிட்டது.

இத்தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பானையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.666 கோடி செலவானதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாகக் கோரிய ரூ.126 கோடியில் ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.