சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு நியமனம்!
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது என்பதும் தமிழக பாதிப்பில் பாதிக்குமேல் சென்னையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்று சென்னையில் மட்டும் சுமார் 3,700 பேர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்பார்வையிட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
கொரோனா தொற்று வராமல் தடுக்கும் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற பணிகளை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.