1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (10:42 IST)

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை அநாகரிக வார்த்தையால் திட்டிய 2அதிபர்!

பிரான்ஸில் ஒமிக்ரான் உருமாற்ற வைரஸுக்கு பிறகு தொற்று எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டு அலைகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் முன்னிலையில் உள்ளது. அதிகளவில் பாதிப்புகளை சந்தித்த அந்த நாட்டில் தடுப்பூசி பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது ஒமிக்ரான் தொற்றால் மீண்டும் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில் அந்நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மேக்ரோன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை பற்றி அநாகரிகமான வார்த்தைகளை உதிர்த்துள்ளர்.

அதில் ‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை நான் சிறையில் அடைக்கப் போவதில்லை. அவர்களை இழிவுப் படுத்த போகிறேன். அவர்களுக்கு தொந்தரவாக இருக்கப் போகிறேன். இதுதான் அரசின் கொள்கை.’ என்று பேசிய அவர் பிரெஞ்சு மொழியில் வசவுக்காக பயன்படுத்தப்படும் ‘emmerder’ என்ற வார்த்தையை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை நோக்கி பிரயோகித்துள்ளார்.