திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 31 ஜூலை 2018 (16:54 IST)

தொண்டர்கள் மத்தியில் பிக்பாக்கெட் - 13 திருடர்கள் கைது

காவேரி மருத்துவமனை அருகே திரண்டிருந்த தொண்டர்களிடம் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்த 13 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவால் கடந்த 4 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டாலும், கருணாநிதி நலம் பெறும் வரை வெளியேற மாட்டோம் என ஏராளமான தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்திலே முகாமிட்டுள்ளனர். 
 
தொண்டர்கள் தங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர்.
 
இருந்தபோதிலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பிக்பாக்கெட் நபர்கள் தொண்டர்களின் செல்போன்கள், பர்ஸுகள் ஆகியவற்றை களவாடியுள்ளனர். இதில் உச்சகட்டமாக ஊடகத்தினரின் கேமரா ஸ்டாண்டுகளையும் களவாடியுள்ளார். 
 
இது குறித்து போலீஸாரிடம் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பிக்பாக்கெட் அடித்ததாக 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
இதன் பின்னர் போலீஸார் தொண்டர்கள் அனைவரையும் தங்களது உடமைகளை பத்திரமாக வைத்திருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.