திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 30 ஜூலை 2018 (18:18 IST)

கருணாநிதியை சந்திக்க ரஜினிகாந்த் வருவது எப்போது?

திமுக தலைவர் கருணாநிதி கடந்த மூன்று நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட திரையுலக பிரபலங்கள் அனைவரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். ஆனால் கருணாநிதியின் 40 ஆண்டுகால நண்பரான ரஜினிகாந்த், வட இந்தியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் அவர் மட்டும் நேரில் வந்து விசாரிக்கவில்லை. இருப்பினும் அவர் தொலைபேசியில் அவ்வப்போது கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ரஜ்னிகாந்த் நாளை சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிப்பார் என ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.