தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட பல மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் இந்தியாவில் மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியானவர்களில் 6 பேருக்கு சென்னை கிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.