புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 டிசம்பர் 2021 (14:31 IST)

ஒமிக்ரான் எதிரொலி: டெல்லியில் பள்ளிகளை மூட உத்தரவு!

ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒளி ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நுழைந்த ஒமிக்ரான் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழ்நாடு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 135 பேர்களுக்கு ஒமிக்ரான் பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து ஒமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
டெல்லியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் இதுவரை நாட்டின் எந்த மாநிலத்திலும் பதிவு செய்யப்படாத அளவில் அதிகபட்சமாக டெல்லியில் பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் மீண்டும் பள்ளிகளை மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், மரணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.