செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2021 கண்ணோட்டம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 டிசம்பர் 2021 (18:53 IST)

2021 ஆம் ஆண்டில் டாப்-10 விளையாட்டு நிகழ்வுகள்

2021 ஆம் ஆண்டில் உலகில் நடைபெற்ற டாப்-10 விளையாட்டு  நிகழ்வுகளை இப்போது காணலாம்.

1)2021  ஆம் ஆண்டில் ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில்,  இந்தியா சார்பில் கலந்துகொண்ட  நீரவ் சோப்ரா  ஈட்டி எறிதல் விளையாட்டில்  தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தார்.

2)021  ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்திற்காக இந்தியா மற்றும் ஜெர்மணி அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில், இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி, 1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதக்கத்தை வென்று சாதித்தது.

3)இத்தாலியில் நடந்த ஏ.பி.டி உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்  இறுதிப்  போட்டியில் ரஷ்ய வீரர்  டேனில் மெட்விடே ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி சேம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

4) டிசம்பர் மாதம்  நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

5)  ஸ்பெயின் நாட்டிலுள்ள வெல்வா நகரில் 26 வது உலக பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில், நடப்பு சேம்பியனாக இந்திய வீராங்கனை சிந்துவை வீழ்த்தி சீன தைபே வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.

6) ஸ்பெயினில் நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் லஷ்யா செனை  வீழ்த்தி இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றறு தங்கப்பதக்கம் வென்றார்.

7) 2021  ஆம் ஆண்டிற்கானன் பாலன் டி ஆர் ( Ballon d or) விருதை பிரபல வீரர் மெஸ்ஸி 7 வது முறையகாப் பெற்று சாதனை  படைத்துள்ளார். இவர் கடைசியாக இவ்விருதை 2019 ஆம் ஆண்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

8) இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரிம்- 2வ்து பகுதி ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி கோப்பை கைப்பற்றியது.

9). 2022 ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், லக்னோ அணியை, சஞ்சீவ் கோயங்க்காவின்  நிறுவனம் ரூ.7,090 கோடிக்கும், அலகாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம் ரூ.5,166 கோடிக்கும் வாங்கியுள்ளது.

10. கடந்த மே மாதம் தென்னாப்பிரிய கிரிக்கெட் அணியின்  நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த டி வில்லியர்ஸ் அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.