1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (14:30 IST)

சென்னையில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல்

சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளன என செய்தி வெளியாகியுள்ளது. 

 
ஆம், சென்னையில் கடந்த 1 ஆம் தேதி முதல் இதுவரை 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் 3 பேர், கோடம்பாக்கம் 2 பேர் என 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
தற்போது மழைக் காலம் தொடங்கி விட்டாலே கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி வரும் நிலையில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருக்கும் இடங்களில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்த அறிவிப்பு ஒன்றையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது