செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2022 (11:03 IST)

ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் மழை!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி திண்டுக்கல், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், புதுக்கோட்டையில்  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.