வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

rain
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்கக் கடலில் புதிதாக தோன்றியுள்ள அசானி புயல் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
 
 மேலும் வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா ஒட்டிய கடல் பகுதியில் நாளை புயல் மையம் கொள்ளும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
மேலும் வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது