1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heat wave would increase in TN due to Asani

வெளியே போகாதீங்க மக்களே! புயலால் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!

தமிழகம்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

 
தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரில் மழைக்கு வாய்ப்பு இருந்தாலும் புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று வீசும் திசையில் மாறுதல் ஏற்படும். தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ரூ.1.14 இலட்சம் கோடியை இழந்தது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்: என்ன காரணம்?