வங்க கடலில் உருவாகும் புதிய புயல்? – பெயர் இதுதான்!
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெறும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வங்க கடலில் அந்தமானை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த சில நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் அந்தமான் பகுதிக்கு மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு அசானி என பெயர் வைக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.